SMS Message (Tamil)

அடுத்து என்ன செய்வது?

உங்களுக்கு கொவிட்-19 இருப்பதாகப் பரிசோதனை முடிவு காட்டினால் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1) கொவிட் பரிசோதனை முடிவின்படி எனக்குக் கிருமித்தொற்று இருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு என்ன அர்த்தம்?

Expand All | Collapse All

மேல்விவரம் அறிய இங்கே அழுத்துங்கள்


உங்களுக்கு கொவிட்-19 நோய்க்கிருமி பரவியிருப்பதாகப் பரிசோதனை முடிவு காட்டுகிறது. சுகாதாரப் பராமரிப்பு வழங்குநரும் சுகாதார அமைச்சும் உங்களுடன் தொடர்புகொண்டு, உங்களைச் சுகாதாரப் பராமரிப்பு வசதிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்வார்கள்.



2) கொவிட் பரிசோதனை முடிவின்படி எனக்குக் கிருமித்தொற்று இருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நான் என்ன செய்யவேண்டும்?

Expand All | Collapse All

மேல்விவரம் அறிய இங்கே அழுத்துங்கள்


நீங்கள் மற்றவர்களை கொவிட்-19 கிருமிப்பரவலில் இருந்து பாதுகாக்க, பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம்:

 

a)    நீங்கள் உடனடியாக முகக்கவசம் அணிந்துகொண்டு, ஒரு தனி அறையில் உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். அந்த அறையில் குளியலறை இணைக்கப்பட்டிருந்தால் நல்லது. வீட்டிலுள்ள மற்றவர்களுடன், குறிப்பாக முதியோருடன், தொடர்பிலிருப்பதை முடிந்தவரை குறைப்பதற்கு இது உதவியாக இருக்கும். நீங்கள் மற்றவர்களுடன் குளியலறையைப் பகிர்ந்து கொண்டால், ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும், நீங்கள் தொட்ட மேற்பரப்புகளை எல்லாம் கிருமிநாசினி அல்லது வெளுப்புமருந்து பயன்படுத்தி துடைக்கவேண்டும். இதன் தொடர்பில் மேல்விவரம் அறிய, தேசிய சுற்றுப்புற அமைப்பு வெளியிட்ட வழிகாட்டிகளைப் பார்க்கவும்.1

b)    நல்ல தனிப்பட்ட சுகாதாரப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் கைகளை சவர்க்காரமும் தண்ணீரும் கொண்டு அடிக்கடி கழுவுதல் இதில் உள்ளடங்கும்;

c)    உணவு, கரண்டி, தட்டு, மற்ற சுய சுகாதாரப் பொருட்கள் எதையும் மற்றவர்களுடன் பகிரக்கூடாது; அதோடு

d)    தொடர்ந்து உடல்வெப்பப் பரிசோதனை செய்து, அறிகுறிகளைக் கண்காணிக்கவும். அறிகுறிகள் மோசமடைந்தால், தயவுசெய்து உங்களது சுகாதாரப் பராமரிப்பு நிபுணருடன் தொடர்பு கொள்ளவும். நெஞ்சு வலி, இதயப் படபடப்பு, மூச்சுத்திணறல் போன்ற அவசர நிலைகளில், அவசர மருத்துவ வாகனத்தை வரவழைக்க 995 அழைக்கவும். உங்களுக்கு கொவிட் கிருமித்தொற்று இருப்பதை அவர்களிடம் தவறாமல் தெரிவிக்கவும்.

 

சுகாதார அமைச்சு உங்களுடன் தொடர்புகொண்டு உங்கள் வீட்டு முகவரியை உறுதிப்படுத்தும். அதோடு, தொடர் கவனிப்புக்காக உங்களைச் சுகாதாரப் பராமரிப்பு வசதிக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யும். போக்குவரத்து வரும் வரை, தயவுசெய்து தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண, தொடர்புகளின் தடங்கள் கண்டறியப்படும். இதற்குத் துணை புரிய, உங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும்போது, உங்களது TraceTogether ஊடலை அருகாமை தரவை பதிவேற்றம் செய்யவும்.



1தேசிய சுற்றுப்புற அமைப்பு, 29 ஏப்ரல்


3) நான் தங்கும் விடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர். கொவிட் பரிசோதனை முடிவின்படி எனக்குக் கிருமித்தொற்று இருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. நான் என்ன செய்யவேண்டும்?

Expand All | Collapse All

மேல்விவரம் அறிய இங்கே அழுத்துங்கள்


நீங்கள் மற்றவர்களை கொவிட்-19 கிருமிப்பரவலில் இருந்து பாதுகாக்க, பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம்:

 

a)    நீங்கள் உடனடியாக முகக்கவசம் அணிந்துகொண்டு, மற்றவர்களுடனான தொடர்பைத் தவிர்க்கவேண்டும். உங்கள் முதலாளியையும் தங்கும் விடுதி நடத்துநரையும் தொலைபேசியில் அழைத்து, பரிசோதனையின் முடிவை அவர்களிடம் தெரிவிக்கவேண்டும்.

b)    நல்ல தனிப்பட்ட சுகாதாரப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் கைகளை சவர்க்காரமும் தண்ணீரும் கொண்டு அடிக்கடி கழுவுதல் இதில் உள்ளடங்கும்;

c)    உணவு, கரண்டி, தட்டு, மற்ற சுய சுகாதாரப் பொருட்கள் எதையும் மற்றவர்களுடன் பகிரக்கூடாது; அதோடு

d)    தொடர்ந்து உடல்வெப்பப் பரிசோதனை செய்து, அறிகுறிகளைக் கண்காணிக்கவும். அறிகுறிகள் மோசமடைந்தால், அல்லது நெஞ்சு வலி, இதயப் படபடப்பு, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டால், தயவுசெய்து தங்கும் விடுதி நடத்துநரிடம் அல்லது முதலாளியிடம் தெரியப்படுத்தி, மருத்துவ ஆலோசனை நாடவும். அவசர நிலைகளில், அவசர மருத்துவ வாகனத்தை வரவழைக்க 995 அழைக்கவும். உங்களுக்கு கொவிட் கிருமித்தொற்று இருப்பதை அவர்களிடம் தவறாமல் தெரிவிக்கவும்.

 

சுகாதார அமைச்சு உங்கள் முதலாளியுடன் அல்லது தங்கும் விடுதி நடத்துநருடன் தொடர்புகொண்டு உங்கள் வீட்டு முகவரியை உறுதிப்படுத்தும். அதோடு, தொடர் கவனிப்புக்காக உங்களைச் சுகாதாரப் பராமரிப்பு வசதிக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யும். போக்குவரத்து வரும் வரை, தயவுசெய்து தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.


கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண, தொடர்புகளின் தடங்கள் கண்டறியப்படும். இதற்குத் துணை புரிய, உங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும்போது, உங்களது TraceTogether2 ஊடலை அருகாமை தரவை பதிவேற்றம் செய்யவும்.



2 TraceTogether என்பது கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து கிருமி பரவியிருக்கக்கூடிய காலகட்டத்தில் அவருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண உதவும் ஒரு செயலியாகும். நேரடித் தொடர்பில் இருந்தவர்களைத் தடைக்காப்பில் வைப்பது போன்ற அவசியமான பொதுச் சுகாதார நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு விரைவாக மேற்கொள்ள இச்செயலி துணை புரிகிறது.



4) கொவிட் பரிசோதனை முடிவின்படி எனக்குக் கிருமித்தொற்று இருப்பதாக என்னிடம் தெரிவிக்கப்படும்போது நான் வேலையிடத்தில் அல்லது வீட்டுக்கு வெளியில் இருந்தால் என்ன செய்வது?

Expand All | Collapse All

மேல்விவரம் அறிய இங்கே அழுத்துங்கள்


நீங்கள் உடனடியாக முகக்கவசம் அணியவேண்டும். நீங்கள் வேலையிடத்தில் இருந்தால், தயவுசெய்து உங்கள் முதலாளியிடம் தெரியப்படுத்தவும். அதோடு, சக ஊழியர்களிடமிருந்து குறைந்துத 2 மீட்டர் தூர இடைவெளியைக் கடைப்பிடிக்கவும். சாத்தியப்பட்டால், சுகாதாரப் பராமரிப்பு வசதிக்கு அழைத்துச்செல்லும் போக்குவரத்துக்காகக் காத்திருக்கையில், மற்றவர்களுடனான தொடர்பைக் குறைக்க, தனி அறையில் இருக்கவும்.

 

சுகாதார அமைச்சு உங்களுடன் தொடர்புகொண்டு உங்கள் முகவரியை உறுதிப்படுத்தும். அதோடு, தொடர் கவனிப்புக்காக உங்களைச் சுகாதாரப் பராமரிப்பு வசதிக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யும். போக்குவரத்து வரும் வரை, தயவுசெய்து தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

தொடர்ந்து உடல்வெப்பப் பரிசோதனை செய்து, அறிகுறிகளைக் கண்காணிக்கவும். அறிகுறிகள் மோசமடைந்தால், தயவுசெய்து உங்களது சுகாதாரப் பராமரிப்பு நிபுணருடன் தொடர்பு கொள்ளவும். நெஞ்சு வலி, இதயப் படபடப்பு, மூச்சுத்திணறல் போன்ற அவசர நிலைகளில், அவசர மருத்துவ வாகனத்தை வரவழைக்க 995 அழைக்கவும். உங்களுக்கு கொவிட் கிருமித்தொற்று இருப்பதை அவர்களிடம் தவறாமல் தெரிவிக்கவும்.

 

கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண, தொடர்புகளின் தடங்கள் கண்டறியப்படும். இதற்குத் துணை புரிய, உங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும்போது, உங்களது TraceTogether ஊடலை அருகாமை தரவை பதிவேற்றம் செய்யவும்.


5) சுகாதாரப் பராமரிப்பு வசதிக்கு நான் எதையெல்லாம் எடுத்துச்செல்ல வேண்டும்?

Expand All | Collapse All

மேல்விவரம் அறிய இங்கே அழுத்துங்கள்


நீங்கள் பின்வருபவற்றை எடுத்துச்செல்ல வேண்டும்:

a)    அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு

b)    கைப்பேசி

c)    தேவையான மின்னியல் சாதனங்கள். எ.கா. மடிகணினி, அதற்குரிய மின்னேற்றி

d)    இரண்டு மாற்று ஆடைகள்

e)    தனிப்பட்ட சுகாதாரப் பொருட்கள்

f)    நீங்கள் தற்போது உட்கொள்ளும் மருந்துகள் (நாட்பட்ட நோய்க்கு சுமார் 1 மாதத்திற்குத் தேவையான மருந்துகள்)


6) எனது TraceTogether தரவை நான் எப்படி பதிவேற்றம் செய்வது?

Expand All | Collapse All

மேல்விவரம் அறிய இங்கே அழுத்துங்கள்


நேரடித் தொடர்பில் இருந்தவர்களைத் தடைக்காப்பில் வைப்பது போன்ற அவசியமான பொதுச் சுகாதார நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு விரைவாக மேற்கொள்ள, தயவுசெய்து உங்களது TraceTogether ஊடலை அருகாமை தரவைப் பதிவேற்றம் செய்யவும்.

 

a)    TraceTogether செயலியைத் திறந்து, திரையின் அடியில் காணப்படும் “UPLOAD” விசையைத் தட்டவும்.

b)    “Enter upload code” விசையைத் தட்டவும்.

c)    குறுந்தகவல்வழி அல்லது அதிகாரம்பெற்ற சுகாதார அமைச்சு அதிகாரி அனுப்பிவைக்கும் 6-இலக்க பதிவேற்றக் குறியீட்டை உள்ளிட்டு, “Upload Data” மீது தட்டவும்.

d)    செய்முறையின் படிப்படியான வழிகாட்டிகளை இணைத்திருக்கிறோம். இது வங்காள மொழி বাংলা, சீன மொழி 中文, ஆங்கில மொழி, மலாய் மொழி, தமிழ் மொழி ஆகியவற்றில் கிடைக்கும்.


உங்களது TraceTogether தகவல்களைப் பதிவேற்றும் முறை [PDF, 3.1mb]

7) நோய்ப்பரவல் நிலவரம் பற்றிய அண்மைத் தகவல்களை எங்கே பெறுவது?

நோய்ப்பரவல் நிலவரம் பற்றிய அண்மைத் தகவல்களை சிங்கப்பூர் சுகாதார அமைச்சின் www.moh.gov.sg இணையத்தளத்தில் பெறலாம். உலகளாவிய நோய்ப்பரவல் நிலவரம் பற்றிய அண்மைத் தகவல்களுக்கு, நீங்கள் உலகச் சுகாதார நிறுவனத்தின் www.who.int இணையத்தளத்தைப் பார்க்கலாம்.