நீங்கள் மற்றவர்களை கொவிட்-19 கிருமிப்பரவலில் இருந்து பாதுகாக்க
, பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம்
a) நீங்கள் உடனடியாக முகக்கவசம் அணிந்துகொண்டு, மற்றவர்களுடனான தொடர்பைத் தவிர்க்கவேண்டும். உங்கள் முதலாளியையும் தங்கும் விடுதி நடத்துநரையும் தொலைபேசியில் அழைத்து, பரிசோதனையின் முடிவை அவர்களிடம் தெரிவிக்கவேண்டும்.
b) நல்ல தனிப்பட்ட சுகாதாரப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் கைகளை சவர்க்காரமும் தண்ணீரும் கொண்டு அடிக்கடி கழுவுதல் இதில் உள்ளடங்கும்;
c) உணவு, கரண்டி, தட்டு, மற்ற சுய சுகாதாரப் பொருட்கள் எதையும் மற்றவர்களுடன் பகிரக்கூடாது; அதோடு
d) தொடர்ந்து உடல்வெப்பப் பரிசோதனை செய்து, அறிகுறிகளைக் கண்காணிக்கவும். அறிகுறிகள் மோசமடைந்தால், அல்லது நெஞ்சு வலி, இதயப் படபடப்பு, மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டால், தயவுசெய்து தங்கும் விடுதி நடத்துநரிடம் அல்லது முதலாளியிடம் தெரியப்படுத்தி, மருத்துவ ஆலோசனை நாடவும். அவசர நிலைகளில், அவசர மருத்துவ வாகனத்தை வரவழைக்க 995 அழைக்கவும். உங்களுக்கு கொவிட் கிருமித்தொற்று இருப்பதை அவர்களிடம் தவறாமல் தெரிவிக்கவும்.
சுகாதார அமைச்சு உங்கள் முதலாளியுடன் அல்லது தங்கும் விடுதி நடத்துநருடன் தொடர்புகொண்டு உங்கள் வீட்டு முகவரியை உறுதிப்படுத்தும். அதோடு, தொடர் கவனிப்புக்காக உங்களைச் சுகாதாரப் பராமரிப்பு வசதிக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யும். போக்குவரத்து வரும் வரை, தயவுசெய்து தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.
கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண, தொடர்புகளின் தடங்கள் கண்டறியப்படும். நீங்கள் TraceTogether செயலியைப் பயன்படுத்தினால், உங்களது TraceTogether2 ஊடலை அருகாமை தரவைப் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்ட உடனே அதனைச் செய்யவும். நீங்கள் TraceTogether சாதனத்தைப் பயன்படுத்தினால், தயவுசெய்து சுகாதாரப் பராமரிப்பு நிலையத்திற்கு அதனை எடுத்துச் செல்லவும்.
2 TraceTogether என்பது கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து கிருமி பரவியிருக்கக்கூடிய காலகட்டத்தில் அவருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண உதவும் ஒரு செயலியாகும். நேரடித் தொடர்பில் இருந்தவர்களைத் தடைக்காப்பில் வைப்பது போன்ற அவசியமான பொதுச் சுகாதார நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு விரைவாக மேற்கொள்ள இச்செயலி துணை புரிகிறது.